சென்னை: தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று “நட்புடன் உங்களோடு மனநல சேவை” என்ற தொலைபேசி வழி மனநல சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மனநல சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தொலைதூர மனநல ஆலோசனை மையம் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு உள்ளது என்றவர், மனநல ஆலோசனை பெற 14416 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்புகொண்டு பேசுபவர்களுக்கு, மனநலம் ஆற்றுபடுத்தும் சேவைகள், மனநல ஆலோசர்களுடன் விடியோ ஆலோசனைகள், தொடர் சிகிச்சைக்கான வழிகாட்டுமுறைகள் வழங்கப்படும் என்றவார்.
மேலும், ஏற்கனவே 104 சேவை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டுருக்கிறது என்றவர், “நட்புடன் உங்களோடு மனநல சேவை” என்ற திட்டத்தில் 2 மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுபடுத்துனர்கள் மனநல ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள் என்றார்.
நயன்தாரா விஷயம் தொடர்பான கேள்விக்கு, விக்னேஷ்சிவன் – நயந்தாரா வாடகைத் தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை. மருத்துமனை உரிய ஆவணங்களை மறைத்துள்ளது. அதற்கு அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்