தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள ஓபிஸ் பண்ணை வீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீடு,  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டியில்  உள்ளது. இந்தப் பண்ணை வீட்டில் கிரவுண்ட் புளோரில் இரு அறைகள் உள்ளன. இதில், ஒன்று கட்சி  பார்வையாளர்களை சந்திப்பதற்கும் மற்றொன்று  முக்கிய நபர்களை சந்திப்பதற்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் முதல் மாடியில்,  ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் அறைஉள்ளது.

இந்த வீட்டில் நேற்று இரவு கொள்ளை நடைபெற்றுள்ளது. கொள்ளைவர்கள்,   பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள சுவரின் வழியாக உள்ளே வந்து, மேல் மாடியில் உள்ள ஓபிஎஸ்-ன்  அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு ஏதும் இல்லாத நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த  54 இன்ச் என்இடி  டிவியை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இன்று காலை, வீட்டின்  பாதுகாவலர்கள் வழக்க்ம போல வீட்டின் மாடிப்பகுதிச் சென்று பார்த்தபோது, அங்கு கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்ச அடைந்தனர். உடனே இதுகுறித்து, ஓபிஎஸ்-க்கும், பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்களைக் கொண்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தனிப்படை அமைக்கப்பட்டு  கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.