சென்னை; தமிழகத்தில் 11 இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சார் ஆடியர், திட்ட அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு. (அதிகாரிகள் ஏற்கனவே வகித்த பதவி அடைப்புக் குறிக்குள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது)
- சி.ஏ. ரிஷப் – திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா்)
- வீா் பிரதாப் சிங் – திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (மேட்டூா் சாா் ஆட்சியா்)
- வி.தீபனாவிஸ்வேஸ்வரி – தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (நீலகிரி மாவட்டம் குன்னூா் சாா் ஆட்சியா்)
- சித்ரா விஜயன் – விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (தருமபுரி சாா் ஆட்சியா்)
- பி.அலா்மேல்மங்கை – கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா்)
- தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் – தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாா் ஆட்சியா்)
- எம்.பிருத்திவிராஜ் – நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (சிவகாசி சாா் ஆட்சியா்)
- வி.சரவணன் – தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணை நிா்வாக இயக்குநா் (தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா்)
- கே.எம்.சரயூ – ஆவின் நிறுவனத்தின் இணை நிா்வாக இயக்குநா் (விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ளாா்)
- வந்தனா காா்க் – கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா்)
- எம்.பி.அமித் – பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையா் – தெற்கு (திண்டிவனம் சாா் ஆட்சியா்)

Patrikai.com official YouTube Channel