ஓசூர்: ஓசூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு பரவி, பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கழிவுநீர் டேங் உள்ளது. இன்று திடீரென அந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு வெளியேறியது. இதனால், பள்ளியில் இருந்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து, அவர்களை ஆசிரியர்களும், அருகே உள்ளவர்களும் உனனடியாக மாணவர்கள் ஆம்புலன்மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பள்ளியில் உள்ள கழுவுநீர் தொட்டியில் இருந்து வாயு வெளியேறியது தெரியவந்தது. வாயு வெளியானது என்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.