டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இருந்தாலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்புகள் தொடர்பான தகவல் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, கடந்த 24மணி நேரத்தில், புதிதாக மேலும், 2,678 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. . இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,23,997 ஆக உள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1% ஆக உள்ளது
நேற்று ஒரே நாளில் மேலும் 10 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,857 ஆக உயர்ந்துள்ளது
தற்போது நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26,583 ஆகக் குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,68,557 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98% ஆக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,21,33,244 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 5,93,963 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.