சென்னை: கொரோனா காலக்கட்டத்தின்போது, அரசு கட்டிடங்களின் வாடகைக்கு இருந்து வணிகர்களின் வாடகையை தள்ளுபடி செய்யும் நடவடிக்கைகை தமிழகஅரசு முன்னெடுத்துள்ளது
கொரோனா காலக்கட்டத்தின்போது தமிழகஅரசு அறிவித்த பொதுமுடக்கம் காரணமாக வணிகர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக அரசு கட்டிடங்களில் வாடகைக்கு இருந்து வரும் வணிகர்கள் கடைகளை திறக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், வாடகை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து, அப்போதைய அதிமுக அரசு, அரசு கட்டிடங்களில் வாடகைக்கு இருந்து வரும் வணிகர்களின் இரண்டு மாத வாடகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஆனால், வணிகர்கள் பொதுமுடக்க காலக்கட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்ட காலங்கள் முழுவதற்கும் வாடகையை தள்ளுபடி செய்ய, திமுக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்றுள்ள தமிழகஅரசு, தற்போது, வணிக நிறுவனங்களுக்கும், குறிப்பாக சிறு கடைகளுக்கு பெரும் நிவாரணமாக கொரோனா காலக்கட்த்திற்கான வாடகையை தள்ளுபடி செய்ய முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் பிற நகர்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கட்டிடங்களில் வணிக நிறுவனங்களுக்கான வாடகையை தள்ளுபடி செய்யும் செயல்முறையை தமிழக அரசு துவக்கியுள்ளது.