சென்னை: தமிழகம் முழுவதும் போலீசாரின் ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’யின் காரணமாக, கடந்த 24 மணி நேர வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர் என காவல்துறை தெரிவித்து உள்ளது. இதில், பல ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த 13 ’ஏ பிளஸ்’ ரவுடிகளும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக காவல்துறை, அவ்வப்போது, தனித்தனி பெயர்களை வைத்து, ரவுடிகள், போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை வேட்டையாடி வருகிறது. ஏற்கனவே கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில், போதைப்பொருட்களை தடுக்க முயற்சித்து வருகிறது. அதுபோல, கடந்த பிப்ரவரி மாதம், பழிக்குப்பழி வாங்கும் ரவுடிகளை ‘ஆபரேஷன் ரவுடி வேட்டை’ என்ற பெயரில் ரவுடிகள் வேட்டை நடத்தி வந்தது.
இந்த நிலையில், தற்போது, மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் பல ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த 13 ’ஏ பிளஸ்’ ரவுடிக;ள உள்பட 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.