aa
 
கிரகாம்பெல் பிறந்ததினம்
தொலைபேசியைக் கண்டு பிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல், 1847ம் ஆண்டு  இதே தினத்தில்தான் பிறந்தார்.  ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர்,ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர்  என பன்முகம் கொண்டவராக பெல் விளங்கினார்.
இவரது தாயாரும் மனைவியும் காது கேளாதோர் ஆனாலும்  இவரது ஆய்விற்கு அவர்கள்  உந்துசக்தியாக விளங்கினார்கள்.  பெல், தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு 1876 ஆம் ஆண்டு தொலைபேசியை  உருவாக்கினார்.  . கிராமபோனைக் கண்டுபிடித்தவரும் இவரே !
 
bb
 
டாடா பிறந்ததினம் 
இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவரான  ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா என்ற டாடா,, குஜராத்தில் உள்ள நவசாரி என்ற கிராமத்தில் 1839ஆம் வருடம்  இதே நாள்தான் பிறந்தார்.   பார்சி ஜொரோஸ்டிரியன் புரோகிதர்கள் குடும்பத்தில் பிறந்த டாடாதான் அவர்களது உறவினர்களில் முதல் வணிகர் ஆவார். .
தனது 14-வது வயதில் தன் தந்தையுடன் மும்பைக்கு வந்த டாடா,  எல்பின்ஸ்டோன் கல்லுாரியில் இன்றைய இளங்கலைப் பட்டத்திற் கு இணையான ‘க்ரீன் ஸ்காலர்’ -ஆக படிப்பை முடித்தார்.  மாணவனாக இருக்கும்போதே ஹிராபாய் தாபு[1] என்ற பெண்ணை மணந்தார் 1858-ல் கல்லுாரியிலிருந்து பட்டம் பெற்ற டாடா, தனது தந்தை வேலை செய்த வணிக நிறுவனத்தில் சேர்ந்தார்.  பிறகு வணிகத்தில் ஈடுபட்டு பெரும் நிறுவனங்களை உருவாக்கினார்.  எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.
1900-ஆம் ஆண்டு வியாபார விஷயமாக ஜெர்மனிக்குச் சென்றபோது, டாடா நோய்வாய்ப்பட்டார். ஆபத்தான நிலையிலிருந்த அவர் நெளஹீமில் 19 மே 1904 ல் காலமானார். இங்கிலாந்தின் வோகிங், புரூக்வுட் மயானத்திலுள்ள, பார்ஸியினருக்கான இடுகாட்டில் புதைக்கப்பட்டார்.