ரஜினியின் எந்திரன், கபாலி, 2.0 மற்றும் கமலின் விக்ரம் ஆகிய படங்களுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்து 300 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது பொன்னியின் செல்வன்.

தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலானதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

தொய்வில்லா திரைக்கதையுடன் கடல் மீது ராஜராஜ சோழன் கொண்ட ஆளுமையை விளக்க டைட்டானிக் பாணியில் கிளைமாக்ஸை காட்சிப்படுத்தி இருப்பதும் மணிரத்னத்தின் சிறப்பு அம்சமாக உள்ளது.

மலேசியா-வில் மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் பொன்னியின் செல்வன் அமெரிக்கா-வில் 36 கோடியும் இங்கிலாந்தில் 10 கோடியும் நான்கு நாட்களில் வசூல் செய்திருக்கிறது.

தவிர, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் நல்ல வசூலை ஏற்படுத்தியிருக்கும் பொன்னியின் செல்வன் உலக அளவில் 300 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.