ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

வேதியியலுக்கான நோபல் பரிசு 2022 கரோலின் ஆர். பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே. பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு “கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக” கூட்டாக வழங்கப்பட்டது.

உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல்  அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறை களில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபர் பரிசுக்கு தேர்வாகம் விஞ்ஞானிகள், அறிவியலாளர் கள், இலக்கியவியலாளர்களுக்கு  நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு  வழங்கப்படும்.

இந்த பரிசு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம்  வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான (2022) நோபல் பரிசு வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாள் (3ந்தேதி) மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 4ந்தேதி  இயற்பியலுக்கானநோபர் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆலன் எஸ்பெக்ட், அமெரிக்காவை சேர்ந்த ஜான் எஃப்.கிளாசர், ஆஸ்திரியாவை சேர்ந்த ஆண்டன் ஜெய்லிங்கர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு  பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

நேற்று (5ந்தேதி) வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. கரோலின் ஆர். பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே. பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு “கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக” கூட்டாக வழங்கப்பட்டது.

அதேபோல், இன்று (வியாழன்)  இலக்கியத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது  2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு 7ஆம் தேதியும்,  பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.