சென்னை: மாநில தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன என அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தெரிவித்து உள்ளனர்.
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.” மழை காலத்திற்குள்ளாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 70 – 80% நிறைவு பெறும். தற்போது வரை சராசரியாக 50% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று அமைச்சர் நேரு ஆகஸ்டு 16ந்தேதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 4ந்தேதி) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, நடப்பாண்டு, மழை காலத்தின்போது, மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றவர், சென்னை மாநகராட்சி, நீர் மேலாண்மை துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது, தற்போதைய நிலையில், மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன என்றவர், பணிகளை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகிறோம் என்றுதெரிவித்துள்ளார்.