திருப்பதி: ஏழுமலையானுக்கு ரூ.1.02 கோடி நன்கொடை வழங்கி அசத்தி உள்ளனர் இஸ்லாமியர்கள். கடவுள் ஒருவரே என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அவர்கள் நன்கொடை வழங்கி உள்ளது பெரும் வரவேற்பைபெற்றுள்ளது. இஸ்லாமிய இளைஞர்களான இவர்களின் செயல்,  தமிழ்நாட்டில் மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளுக்கு செருப்படியாக அமைந்துள்ளது.

உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் எனக் கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. ஒவ்வொரு மதத்தினரும் அவர்களுக்கு பிடித்தமானவர்களை கடவுளாக எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அரசியல்வாதிகளும், சில ஆன்மிகவாதிகளும், தங்களை பிரபலப்படுத்திக்கொள்ளவும், தங்களது ஆதாயத்துக்காகவும் மக்களிடையே மதத்தின் மூலம் பிரிவினையை ஊக்குவித்து வருகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், திமுக எம்.பி. ராசா பேசியதும் சர்சையாகி உள்ளது.

இந்த நிலையில், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில், மதத்தை அரசியல் செய்யும் அடிவருடிகளுக்கு பாடம்புகட்டும் வகையில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வர்கள், திருப்பதி ஏழுமலையான் கோவில் பணிக்கு ரூ.1.02 கோடி நன்கொடை அளித்து அசத்தி உள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த சுபினா பானு, அப்துல் கனி ஆகியோர்  திருப்பதி கோவிலின் அன்னதானத்துக்கு ரூ.15 லட்சமும்,  பத்மாவதி மாளிகை புதுப்பிப்பு பணிக்கு ரூ.87 லட்சமும், ஆக மொத்தம் ரூ.1.02 கோடியை தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினர். இஸ்லாமிய இளைஞர்கள் திருப்பதி கோவிலுக்கு  நிதி உதவி வழங்கி வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மத வெறியர்களுக்கு சவுக்கடியாகவும் அமைந்துள்ளது.