மும்பை: மத்திய அமைச்சர் நாராயண ரானேவின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ளுங்கள் என மும்பை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தர விட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முப்பை கடற்கரையோரம் விதிமுறைகளை மீறி மத்திய அமைச்சர் நாராயண ரானேவுக்கு சொந்தமான பங்களா கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாக கட்ட மும்பை மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற நிலையில்,  அனுமதி பெற்ற இடத்தை விட கூடுதலாக பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின்போது, மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இது சர்ச்சையான நிலையில், நாராயண ராணேவுக்கு எதிராக மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் விசாரணையின்போது, மும்பை மாநகராட்சி சார்பில், விதிகளை மீறி மத்திய அமைச்சர் நாராயணன் ரானே  மும்பை கடற்கரையை ஒட்டிய ஜுகு பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியின்றி கட்டடங்களைக் கட்டியதாகவும், பங்களா கட்ட அனுமதிக்கப்பட்ட அளவை விட 300 சதவீதம் கூடுதலாக கட்டடங் களை கட்டியதாக கூறியது. அப்போது, விதிமீறல் கட்டடங்களை முறைப்படுத்த நாராயணன் ராணே தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, 8000 சதுர அடியில் பங்களா கட்ட அனுமதி பெற்றுவிட்டு 22 ஆயிரம் சதுர அடியில் பங்களா கட்டியதற்காக மத்திய அமைச்சருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளதுடன், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிங்களை இடித்து தள்ளவும் மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.