பிஜிங்: சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கட்டிடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீனாவின் ம த்திய ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷா நகரில் உள்ள 42 மாடிகள் கொண்ட சீனா டெலிகாம் கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா டெலிகாம் அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்கி  வருகிறது. இந்த அலுவலகத்தில்தான் முதலில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. .இது மளமளவென பரவத்தொடங்கி மற்ற மாடிகளுக்கும் பரவியது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்ததால் தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில்  டஜன் கணக்கான மாடிகள் எரிந்தன, பெரிய தீ தீப்பிழம்புகள் மற்றும் கரும் புகையை அனுப்பியது  ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  தீயை விரைவாக அணைக்க முடிந்த 280 தீயணைப்பு வீரர்களை அனுப்பியதாக நகரின் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீ பிடித்தவுடன் முதற்கட்டமாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், மற்றொருபுறம் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.