இஸ்லாமாபாத்: கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான இழப்பை எதிர்கொண்ட பாகிஸ்தான், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நாடே வெள்ளக்காடாக மாறி உள்ள நிலையில், மேலும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக,  அங்கு பல்வேறு துறையகளில் பணியாற்றி வந்த  சீன அதிகாரிகள், தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

ராஜபக்சே குடும்பத்தின் மோசமான ஆட்சி காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டது. அதைத்தொடர்ந்து தற்போது,  பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.  பொருளாதார சிக்கலில் இருந்துதப்பிக்க பாகிஸ்தான், அரபு நாடுகள், சீனா, ஆப்கானிஸ்தான் உட்படப் பல நாடுகள்  ஐஎம்எஃப் இடமும்  உதவியை நாடி யிருந்தது. ஆனால், முறையான உதவிகள் வராத நிலையில்,  எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீலம் – ஜீலம் ஹைட்ரோபவர் ஆலையைத் பாகிஸ்தான் அரசு தற்காலிகமாக முடக்கியது. இதனால், அங்கு வேலைபார்த்த சீன அதிகாரிகள் வெளியேறிவிட்டனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மெகா 969 மெகாவாட் நீலம்-ஜீலம் நீர்மின் திட்டத்தைப் பழுதுபார்ப்பதை சீனப் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கைவிட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் அருகே இந்த ஆலை அமைந்துள்ளது மற்றும் ஒரு முக்கியமான சுரங்கப்பாதையை திறக்க சீன பொறியாளர்கள் பணியாற்றினர்.  எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறை  காரணமாக தத்தளித்து வந்த இந்த ஆலையில் பணியாற்றி வரும், சீனர்களுக்கு காவல்துறை நம்பகமான பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டதாக கூறிஇ, அங்கு பணியாற்றிய  சீனர்கள் சாக்குபோக்குகளை கூறி நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இது  பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையே பெரும் பிளவை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தானில் பெய்த கனமழை அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், அந்நாட்டுக்கு 3ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்றும், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறையும்  என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில்   இதுவரை இல்லாத அளவு கடந்த ஜூன் மாதம்  பிற்பகுதியில் தொடங்கிய  பருவமழை வெளுத்து வாங்கியது. பலூசிஸ்தான், சிந்து மாகாணங்களில் ஏற்பட்ட மழையால் ஆறுகளிலும், நதிகளிலும் ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது. மழை வெள்ளத்துக்கு இதுவரை  1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடைமைகளை இழந்துள்ளனர், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளார். மூன்றில் ஒருபகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு, மேலும்  3ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்றும், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறையும்  என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்த பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ், பாகிஸ்தானின் தேசிய வெள்ள மீட்பு மற்றும்ஒத்துழைப்பு மையத்தின் மேஜர் ஜெனரல் ஜாபர் இக்பால், பிரதமர் ஷேபாஸ் ஷரீப்  ஆகியோர்  கூட்டாகப் பேட்டியளித்தனர்.

அப்போது, “ பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஒட்டுமொத்தமாக 3000 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மூன்றில் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பாகிஸ்தான் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறையும். வெள்ள பாதிப்பு, ஐஎம்எப் நிதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், உக்ரைன் போர் ஆகிய ஒட்டுமொத்த காரணிகளில் பொருளாதார வளர்ச்சி குறையும். பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 17 லட்சம் வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளன. 6,600 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளன, 269 பாலங்கள் சேதமடைந்துள்ளன என்று பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

ற்கெனவே பாகிஸ்தான் பொருளதாரம் பாதாளத்துக்குச் சென்று சர்வதேச செலாவணி நிதியத்திடம் உதவி பெற்றுள்ளது. இப்போது வெள்ளத்தால் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகக் குறையும்போது, அதன் பாதிப்பு இன்னும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 திவாலாகிவிட்ட பாகிஸ்தானின் கடன் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது, ஏனெனில் வானிலை நட்பு நாடான சீனா 3 பில்லியன் டாலர் கடன்களை மறுகட்டமைக்க மறுத்துவிட்டது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) கீழ் நிறுவப்பட்ட சீனாவின் நிதியுதவி எரிசக்தி திட்டங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் பொறுப்புகளை மன்னிக்குமாறு இஸ்லாமாபாத் பெய்ஜிங்கைக் கோரியது. ஆனால், பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்க சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது. இதனால் பாகிஸ்தானில் பணியாற்றி வரும் பல அதிகாரிகள், ஊரியர்கள் சீனா திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.