லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு காரணமாக, அந்நாட்டு தேசிய கொடி, தேசிய கீதம்,  நாணயம், தபால் தலை, பாஸ்போர்ட் போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்டு வரும் நாணயங்களில் நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். அதில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய மன்னர் உருவம் பொறிக்கப்படும். மேலும் தபால் தலை மற்றும் தேசிய கீதத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி மறைவைத் தொடர்ந்து, சார்லஸ் அந்நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ளார். இதயடுத்து, எலிசபெத்துடன் தொடர்புடைய, அதாவது,  அவரது 70 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியுடன் தொடர்புடைய பல விஷயங்கள் மாற்றங்களுக்கு உட்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முடியாட்சி என்பது ஐக்கிய இராச்சியத்தின் தேசிய வாழ்வின் தவிர்க்க முடியாத பகுதியாகும், மேலும் மன்னரின் உருவம், சின்னங்கள் மற்றும் அரச சைஃபர் ஆகியவை அவரது குடிமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் சிக்கலான முறையில் பின்னிப்பிணைந்துள்ளன. ராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் இளவரசர் பிலிப்பிற்கு அருகில் பெர்க்ஷயரில் உள்ள வின்ட்சர் கோட்டையில் உள்ள கிங் ஜார்ஜ் VI நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவதால், அவரது 70 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியுடன் தொடர்புடைய – மற்றும் குறிக்கும் – பல விஷயங்கள் மாற்றங்களுக்கு உட்படும் என பங்கிங்காம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், தனது 97வது வயதில் மறைந்தார். இவர் சுமார் 70 ஆண்டுகள் பிரிட்டன் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே திகழ்ந்தார். காரணம், அந்நாட்டின்,  நாணயங்கள், தபால்தலைகள், தபால்பெட்டிகள் உட்பட பலவற்றில் ராணியின் உருவப்படமே பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது அவைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து நாட்டின்  தேசிய கீதத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது. தற்போதுள்ள தேசிய கீதத்தில். ‘கடவுளே ராணியைக் காப்பாற்றுங்கள்’ என உள்ளது. அதை,  கடவுளே அரசரைக் காப்பாற்றுங்கள் என மாற்றப்பட இருப்பதாகவும்,  அதிகாரபூர்வமாக  அரசாராக சார்ல்ஸ் அரசராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த மாற்றமானது நடைமுறைக்கு வரும். இது 1952ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிரிட்டனின் தேசிய கீதத்தில் செய்யப்படும் மாற்றம் இது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது, புழக்கத்தில் உள்ள நாணயங்களில், கடந்த 2015ம் ஆண்டு, அதாவது ராணியின் 88வது வயதில்  எடுக்கப்பட்ட ராணியின் வயதான புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது அவரது ஆயுட்காலத்தில் 5வது முறையாக புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள  சார்ல்ஸின் உருவம், நாணயம் உள்பட அனைத்து இடங்களிலும் பொறிக்கப்பட உள்ளது.

புதிய மன்னரின் உருவத்துடன் கூடிய நாணயங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடைமுறை படிப்படியாக நடைபெறும் என்றும், அதுபோல, 1960ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் ராணியின் படம் இருக்கும். அவைகளும்  நாணயங்களோடு சேர்த்து அவையும் படிப்படியாக மாற்றப்படும்.  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், கடந்த  1967ஆம் ஆண்டு முதல் ‘ராயல் மெயில்’ அமைப்பால் வெளியிடப்பட்ட அனைத்து தபால் தலைகளிலும் இரண்டாம் எலிசபெத் ராணியின் படம் இருக்கும். தற்போது கைவசம் உள்ள தபால்தலைகள்,  கடிதம் மற்றும் பார்சல் சேவைகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ள அதிகாரிகள்,  புதிய மன்னரின் உருவம் பதித்த தபால் தலைகள் அச்சிடும் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறி உள்ளனர்.

ஏற்கனவே 2018ம் ஆண்டு, இளவரசர் சார்ல்ஸின் 70வது பிறந்தநாளையொட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் ஆறு புதிய தபால் தலைகள் வெளியிடப்பட்டன. அதையே தொடரலாம், அல்லது வேறுதபால் தலை தேர்வு செய்யய்ப்படலாம் என  ‘ராயல் மெயில்’ தெரிவித்துள்ளது. அத்துடன் மன்னரை   அடையாளப்படுத்தும் வகையிலான சின்னத்தையும் தபால்பெட்டிகளில் பொறிக்கும்.

அத்துடன் அரச குடும்பங்களுக்கு தொடர்ந்து பொருட்கள் வழங்கும்  நிறுவனங்களான  சில வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட மேலும்  சில நிறுவனங்கள், தங்களது பொருட்களில் ராணியின் தனிச்சின்னத்துடன் “By appointment to Her Majesty the Queen” என்ற வாசகம் பொறித்து கவுரவப்படுத்தி வருகின்றனர்.  தற்போது, ராணி எலிசபெத் மறைந்துவிட்டதால், அவர் வழங்கிய ராயல் வாரண்ட் செல்லுபடியற்றதாகிவிடும். சம்பந்தப்பட்ட நிறுவனம் இரண்டு வருடங்களுக்குள் அந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவைகளிலும் மாற்றம் ஏற்படலாம் என்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவைகள் மட்டுமின்றி, இங்கிலாந்து பாஸ்போர்டிலும் மாற்றம் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. தற்போது புழக்கத்தில்  ராணியின் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட கடவுச்சீட்டு தொடர்ந்து செல்லுபடியாகும் நிலையில், இனிமேல் அச்சிடப்படும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)  மன்னரின் ஒப்புதலுடன் வழங்கப்படும். வழக்கமாக கடவுச்சீட்டின் முன்புற அட்டையின் உட்புறத்தில் மன்னரோ அல்லது ராணியோ வழங்கும் ஒப்புதல் குறிப்பு இடம்பெறும் என்றும், அந்நாட்டு  போலீஸ் அதிகாரிகளின் தலைக்கவசத்தில் உள்ள ராணியை அடையாளப்படுத்தும் சின்னம் மாற்றப்பட்டு மன்னரை அடையாளப்படுத்தும் சின்னம் பொறிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.