சென்னை:
ராணி எலிசபெத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நல குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராணி எலிசபெத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சிபுரிந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது
எல்லா காலங்களிலும் மிகச்சிறந்த ஆட்சியாளர் இரண்டாம் எலிசபெத் என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel