வாஷிங்டன்: 12வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க மக்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி, உலக நாடுகளின் பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது. இருந்தாலும் கொரோனா தொற்று போன்ற நோய்தொற்றுகளை தடுக்க தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 12வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நாங்கள் 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு புதிய தடுப்பூசி திட்டத்தை தொடங்குகிறோம். இது புதிய அணுகுமுறை என்று தெரிவித்துள்ளடன், இந்த திட்டத்தின்மூலம், 12வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்படும்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உரு மாறி வருவதால், அதை தடுக்கும் நோக்கில், நமது தடுப்பூசிகளும் புதுப்பிக்கப்பட்டு, வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசியைப் போலவே இந்த தடுப்பூசியை தொழிலாளர் தினத்துக்கும், ஹாலோவீனுக்கும் (இது அக்டோபர் மாதம் வரும்) இடையே நீங்கள் அதைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்வது மக்களுக்கு பாதுகாப்பானது என்றும், இது இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.