சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து வரும் ஜிஸ்கொயர் நிறுவனம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்நிறுவனம் குறித்து பேச பிரபல யுடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பிரபலமடைந்து வருகிறது, ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் எனப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம். இந்நிறுவனத்தின் பங்குதாரராக, முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருக்கிறார். இதனால், இந்த நிறுவனம் திடீரென அதிரடியாக பல்வேறு இடங்களை வளைத்து போடுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராமஜெயம் சார்பில் மே 21 ஆம் தேதி புருஷோத்தம் குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்புகார் அளித்தார். அந்த புகாரில், ஜிவி நிறுவனம், சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் காவல்துறை, ஜூவி நிரூபரை கைது செய்தனர். மேலும், சவுக்கு சங்கர், மாரிதாஸை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில், ஊடகத்தினரும் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்பட்டது.
‘இருந்தாலும் ஜிஸ்கொயர் நிறுவனம் மீது அறங்பபோர் இயக்கம் உள்பட பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். சவுக்கு சங்கரும் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதையடுத்து, ஜிஸ்கொயர் நிறுவனம் தரப்பில், சவுக்கு சங்கர் பேச தடை விதிக்கும்படி வழக்கு தொடரப்பட்டது. மனுவில், சவுக்கு சங்கரின் அவதூறு களால் முன்பதிவு செய்த்திருந்த வாடிக்கையாளர்கள் முன்பதிவை ரத்து செய்ததாக ஜி ஸ்கொயர் மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்துள்ளது. மேலும், ஜி ஸ்கொயர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 30-க்குள் சவுக்கு சங்கர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.