டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,219 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பாக தகவல்களை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மேலும், 7,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,44,49,726 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.98 சதவிகிதமாக உள்ளது.
தற்போது, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 56,745 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு மேலும் 33 பேர் இறந்ததால் இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,27,965 பேர் ஆக உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 9651 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,38,65,016 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 25,83,815 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது நாடு முழுவதும் இதுவரை 2,13,01,07,236 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.