ஜம்மு:
ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டவர் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், இந்திய ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார்.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டைச் சேர்ந்த அகோஸ் வெர்ம்ஸ் என்ற சுற்றுலா பயணி இந்தியாவில் தனியாக பல பகுதிகளுக்கும் வலம் வந்தார். மலையேற்ற வீரரான அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் மலையேற்றம் செய்யும் போது வழி தவறி, சும்சாம் பள்ளத்தாக்கில் உள்ள உமாசிலா கணவாய் பகுதியில் காணாமல் போனார் என்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, காணாமல் போன ஹங்கேரி நாட்டவரை மீட்கும் பணியில் இந்திய ராணுவமும், விமானப்படையும் இறங்கியது.
சுமார் 30 மணி நேர தேடுதலுக்கு பிறகு, வெர்ம்ஸ் பத்திரமாக மீட்கப்பட்டார். தன்னை மீட்ட இந்திய ராணுவத்திற்கு வெர்ம்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.