சென்னை: தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைக்கு காரணமாக இருக்கும் எலிபேஸ்ட், சாணிப்பவுடருக்கு தடை விதிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

அமைச்சர் நேற்று மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகதாதார நிலையங்களை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தற்கொலைகளில் பலர்  எலி பேஸ்ட், சாணிப் பொடி போன்றவற்றை உண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அதனால், தற்கொலைக்கு காரணமாக எலிபேட், சாணி பவுடர் போன்றவைகள் விற்பனையை தடை செய்ய தமிழகஅரச முடிவு செய்துள்ளது. இந்த பொருட்கள் தடை செய்யப்பட வேண்டியது அவசியம் என்றவர், இவைகளே அதிக அளவிலான  தற்கொலைக்கு பெருமளவில் காரணமாக உள்ளது என்றார்.

மேலும், எலிபேஸ்ட், சாணிப்பவுடர் போன்றவை தனிநபர் கேட்டால் விற்பனை செய்யக்கூடாது என வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.