சென்னை:
திவுத்துறையில் புதிய சீர்திருத்த கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவிக்கையில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்தை மீட்டு உரியவர்களுக்கே அளிக்க வகை செய்யும் இந்த சட்டம் கொண்டுவர வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.