சென்னை: பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு மகாபந்தன் கூட்டணி ஆதரவுடன் 8வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கும் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள ராஷ்டிரிய ஜனதாளதளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிய நிலையில், நேற்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மகாபந்தன் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, இன்று பாட்னாவில் உள்ள ராஜ் பவனில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மாநில முதல்வராக பதவி ஏற்ற நிதீஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுக்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பீகார் மாநில துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து தனது டிட்வீட் செய்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என்று தெரிவித்துள்ளார்.