சென்னை; சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217-வது நினைவு தினத்தையொட்டி இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், ஈரோடு மாவட்டம் ஓடாநிலை என்ற இடத்தில், தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சி ஓடாநிலையில் அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, சேலம் மாவட்டம் சங்ககிரியில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு சின்னம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.