மதுரை: மதுரை அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக கூழ் காய்ச்சி கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர், கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார். அவரை மீட்டு மருத்தவமனையில் அனுமதித்த நிலையில், அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான CCTV காட்சி வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில்  ஆடி வெள்ளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சினர். பல அண்டாக்களில் கூழ் காய்ச்சப்பட்டிருந்தது. அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர்,  எதிர்பாராதவிதமாக  நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை யில் சேர்த்தனர். அவரது உடலில் 65 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி அடுத்தநாளே உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவர் கூழ் அண்டாவில் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விசாரணையில், கூழ் அண்டாவில் விழுந்த நபர், அந்த பகுதியில் உள்ள மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் (எ) முருகன் என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு எதிர்பாராதவிதமாக மயக்கம் ( தலைசுற்றல்) ஏற்பட்டதால், கொதித்துகொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து விழுந்ததாகவும், அருகே இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்ற நிலையில், கூழ் கொதி நிலையில் இருந்தால், இறுதியில்,  அங்கிருந்த ஒருவர் அண்டாவை கீழே தள்ளிவிட்டார். இதனையடுத்து தான் அருகில் இருந்தவர்களால் முருகன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், தற்போது முருகன் கூல் அண்ணாவில் தவறி விழும் சிசிடிவி வீடியோ  காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது.