டெல்லி: தனிநபா் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ந்தேதி கடைசி நாள் என்பதால், நேற்று ஒரே நாளல் 67 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் 4லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

2021-22ம் ஆண்டுக்கான வரிமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ந்தேதி வரை காலஅவகாசத்தை நேரடி வரிகள் வாரியம் அறிவித்திருந்தது. அதன்பிறகு வருமான வரி தாக்கல் செய்தால், குறைந்த பட்சம் ரூ. ஆயிரம் முதல் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் கடைசி தினமான நேற்று ஒரேநாளில், 67.97 லட்சம் போ்  ஐடி ரிட்டன் தாக்கல் செய்திருந்தனா்.  வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5.73 கோடியை எட்டியது.  ஜூலை 30 வரை 5.1 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், கடைசி தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரையிலான நிலவரப்படி 67.97 லட்சம் போ் தாக்கல் செய்திருந்தனா். அதிலும் குறிப்பாக 10-11 மணி வரையிலான ஒருமணி நேரத்தில் 4,50,013 வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறை iவிட்டரில் தெரிவித்துள்ளது.

பல வரி செலுத்துவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாகவும் புகார் அளித்தனர், அதைத் தொடர்ந்து “#Extend_Due_Date_Immediately” என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.