சென்னை
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் முறை நடைபெறும் இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி சதுரங்க கரை வேட்டி சட்டையுடன் வந்துள்ளார்.

இந்த 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான விஸ்வநதன் ஆனந்த் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அதை முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கினார். இந்த ஜோதியை இளம் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா ஏற்றினார்கள்.
[youtube-feed feed=1]