டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுமுடிவுகளை மத்திய கல்வி வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதையடுத்து சிபிஎஸ்இ மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்க தமிழகஅரசு 5 நாட்கள் அவகாசம் வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, விரைவில்,  பொறியியல் படிப்பு கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.