டெல்லி: பன்னீர் பட்டர் மசாலாவுக்கான ஜிஎஸ்டி குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் , அதுதொடர்பான டிவிட்டை பகிர்ந்து கலாய்த்து உள்ளார். மோடி ஆட்சி அமல்படுத்திஉள்ள ஜிஎஸ்டியின் முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.
மத்திய நிதி அமைச்சகம் ஜூலை 18 முதல் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு விதிகளை விதித்துள்ளது. அதில் பால், தயிர் மற்றும் பனீர் போன்ற உணவு பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. மேலும் வெண்ணெய்க்கு 12% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. சில பொருட்களுக்கு 5 சதவிகிதம், பால் பொருட்களுக்கு 12 சதவிகிதம், வேறு சில பொருட்களுக்கு 18 சதவிகிதம் என மாறுபட்ட நிலையில் உள்ளது. இதனால், உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான பன்னீர் பட்டர் மசாலாவுக்கு உணவு நிறுவனம் வழங்கியுள்ள ஜிஎஸ்டி குறித்து அறிந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர், அந்த டிவிட்டை இணைத்து, டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், , “இந்த அற்புதமான வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை யார் கொண்டு வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது ஜிஎஸ்டியின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்து கிறது, நகைச்சுவையை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.