படம்+ செய்தி நன்றி: தமிழ் முரசு
படம்+ செய்தி நன்றி: தமிழ் முரசு

 
ன்னிக்கு,  தளபதியார்  மு.க. ஸ்டாலின்  அவர்களோட பொறந்தநாளாச்சே… 64வது பிறந்தநாள் காணுறார்.. நேரா போய் பார்த்து ஒரு வாழ்த்து சொல்லலாம்னுதான் நெனச்சேன்.  பத்திரிகைக்காரங்கன்னா போய் பார்க்கலாம். அவருகூட, பத்திரிகைக்காரங்கள கூப்புட்டு விருந்தெல்லாம் கொடுத்து ஆலோசனை பண்ணாரே… ! நான் வெட்டியா ஊரு சுத்தறவன்.. என்னை மதிச்சு வாழ்த்து பெறுவாரா என்ன?
சரி போகட்டும்னு  ஆபீஸ் மொட்டை மாடிக்கு தினசரிங்கள எடுத்துட்டுபோயி புரட்ட ஆரம்பிச்சேன்.
ஒரு மாலை பத்திரிகையில,  “மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்.. தொண்டர்கள் உற்சாகம்”னு கொட்டை எழுத்தில போட்டிருந்துச்சு.
ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

செய்திய படிக்க ஆரம்பிச்சேன்:
“திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ம் தேதி ஆகும். இன்று அவருக்கு 64வது வயது பிறக்கிறது. இந்த நாளை திமுகவினர் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே திமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு போட்டிகள், அன்னதானம், ரத்த தானம், கண்தானம் உள்ளிட்டவை நடந்து வருகிறது” அப்படினு போட்டிருந்துச்சு.
திருவல்லிக்கேணி பெரிய மசூதி அருகே ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கினாராம்!
திடும்னு டிவி பாக்கலாம்னு தோணுச்சு. அதிலயும் தளபதியார் பிறந்தநாள் விழா கொண்டாடியதை சொல்லிக்கிட்டிருந்தாங்க.
சரின்னு, அதை ஆஃப் பண்ணிட்டு செல்போன தட்டி, இன்னும் சில தினசரிங்கள நெட்டுல மேய ஆரம்பிச்சேன்.
கிருஷ்ணகிரியில   நகர தி.மு.க., சார்பில், ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமா கொண்டாடினாவளாம்.  அதாவது  அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் அணிவிச்சாவளாம்!
கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலைக்கு, மா,செ. சுகவனம் மாலை அணிவிச்சி,  64 கிலோ கேக்கை வெட்டுனாராம். அப்புறம் அன்னதானமும் நடந்துச்சாம்.
கீழப்பாவூர் லட்டு
கீழப்பாவூர் லட்டு

பெரிய பெரிய ஊருங்கள விடுங்க…  நெல்லை மாவட்டத்துள இருக்கிற குட்டியூன்டு ஊரு கீழப்பாவூர் அங்கே,  64 கிலோ லட்டுகளை பொதுமக்களுக்கு  வழங்கி கொண்டாடியிருக்காவ.
இப்படி தமிழ்நாடு முழுக்க தி.மு.க. காரவுக தங்களோட தளபதி பிறந்தநாளை பிரம்மாண்டமா கொண்டாடியிருக்காங்க.
நல்லதுதானே.. ஏதோ காரணத்தை வச்சு நாலு பேருக்கு லட்டு பூந்தி கெடைச்சா, நான் என்ன வயித்தெரிச்சலா படப்போறேன்?
ம்.. அப்படியே பேஸ்புக்கு வந்தேன். தளபதியார் பக்கம் போயி நாமளும் ஒரு வாழ்த்தை போடுவோம்னு போனேன்.
அங்கே தளபதியார் எழுதியிருந்தத படிச்சேன். அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்!
அப்புடி என்ன எழுதியிருக்காருன்னு கேக்கிறியளா… இதோ தளபதியார் எழுதியிருக்கிறத அப்படியே சொல்றேன்:
“அன்பான கழக உடன்பிறப்புகளுக்கு வணக்கம்!
கழக தொண்டர்களும், உடன்பிறப்புகளும், நிர்வாகிகளும் என் மீது கடும் கோபத்தில் இருப்பார்கள் என்பது புரிகிறது. “பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுகிறார்”, இதற்கு முன் “நமக்கு நாமே” பயணத்திற்கு வராதே” என்று கட்டளையிடுகிறார் என்றெல்லாம் என் மீது கழக உடன்பிறப்புகள் வருத்தத்தில் இருப்பீர்கள்.
ஆனால் இரண்டுமே தமிழக மக்களுக்காக- தமிழகத்தின் நலனுக்காக என்பதை கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு.
 
தளபதியாரின் நம்பிக்கை பதிவு
தளபதியாரின் நம்பிக்கை பதிவு

 
மார்ச் 1-ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம், மக்கள் விரோத அதிமுக அரசின் அவலத்தை மக்கள் மன்றத்திற்கு வீடு வீடாக கொண்டு போக வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளுக்கு அன்புக் கட்டளையிட்டேன்.
அதை அப்படியே செவ்வனே நிறைவேற்றியிருப்பதைப் பார்த்து, –  அதிமுக அரசின் அவலத்தை வீடு வீடாக கொண்டு சேர்த்ததைப் பார்த்து  – உண்மையிலேயே நான் மகிழ்ச்சியுடன்…”

  • இப்புடி போவுது அந்த பதிவு.

அடப்பாவமே..  தளபதியாரு பொறந்தநாளை தமிழ்நாடு முழுக்க உடன்பொறப்புக கொண்டாடியிருக்காக.. ஆனா “பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டேன். . அதை கழக உடன் பிறப்புகள் அப்படியே செவ்வனே நிறைவேற்றியிருப்பதைப் பார்த்து மகிழ்கிறேன்”னு எழுதியிருக்காரு. (மதியம் 2 மணிக்கு!)
அப்படியே பேஸ்புக்கு, ட்விட்டரு, வாட்ஸ் அப்புன்னு மேய்ஞ்சேன்.  எல்லாத்திலேயும் “தளபதியார் பிறந்தநாள் கொண்டாட்டம்”னு பதிவு காலையிலேருந்து ஓடிட்டிருக்கிறது தெரிஞ்சுது.
அட… நம்ம பத்திரிகை டாட் காம் இதழ்லகூட, அனுமதி இல்லாம மு.க.ஸ்டாலினுக்கு பேனர்னு ஒரு நியூஸ் இன்னிக்கு வந்துச்சே. (ஏற்கெனவே அதே இடத்துலதான் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு அதே சைஸ்ல பேனர் இருந்துச்சுன்னும் போட்டிருக்காங்க..!)
ஆனா,  தான் சொன்னதை தொண்டருங்க அப்படியே பாலோ பண்ணிட்டாங்கன்னு அப்பாவியா நம்புறாரே!  ஊரு உலகத்துக்கெல்லாம் தெரிஞ்ச விசயம் இவருக்குத் தெரியலியே..!
ஸ்டாலின் அய்யா.. இப்புடி அப்புராணியா இருந்தா எப்புடி சி.எம். ஆவுறது?