புதுடெல்லி:
மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு என்று காங்கிரஸ் கடும் தாக்குதல் தொடுத்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால் கைரா,விவசாயிகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிராகவே நடந்து வருகிறது.
விவசாயச் சட்டப் போராட்டத்தை வாபஸ் பெறுவதற்கு முன், சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) க்கு உறுதியளித்தபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதத்தை உறுதி செய்வதற்காக ஒரு ‘கமிட்டி’யை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
‘சுவாமிநாதன் கமிஷன்’ அறிக்கையை அமல்படுத்துவது கிசான் காங்கிரஸின் பிரதான மையமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel