சென்னை:
வரலாற்றில் முதல்முறையாக தொன்மை வாய்ந்த கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூமி ஈஸ்வரர் கோயில்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் பிரிவு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் இன்று காலை இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, வரலாற்றில் முதல்முறையாக 1000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கோயில்களில் திருப்பணி செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
Patrikai.com official YouTube Channel