சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாளை நடைபெற உள்ள  நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

மருத்துவ படிப்புக்காக, 12ம் வகுப்பு தேர்வெழுதி, அதில் 430மதிப்பெண் பெற்றிருந்த மாணவி, அரியலூர் ரயில்வே காலனியை சேர்ந்த நிஷா என்ற மாணவி, நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்வை எதிர்கொள்வதற்கு முன்பாகவே தோல்வ அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மாணவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி நிஷா ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய நிலையில் மீண்டும் 2 ஆம் முறையாக தேர்வு எழுத தயாராகி வந்தார் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவிகள் நீட் தேர்வை தைரியமுடன் எதிர்கொள்ள, அரசு சார்பில் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக அரசு பதவி ஏற்றதும், நீட் பயிற்சி விலக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.