சென்னை: அதிமுக பொருளாளர் விவகாரம் தொடர்பாக புதியதாக தேர்வு செய்யப்பட்ட பொருளாளர் தொடர்பாக வங்கிகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளனர். அதிமுக கணக்கு வைத்துள்ள கரூர் வைஸ்யா வங்கிக்கு இரு தரப்பும் கடிதம் எழுதி உள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதும், ஓபிஎஸ் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, புதிய பொதுச்செயலாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
அவரது கடிதத்தல், இதற்கு முன் பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ். அதிமுகவின் வங்கி வரவு செலவுகளை பராமரிப்பது, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை வைத்திருந்தார் தற்போது புதிய பொருளாளராக தேர்வான திண்டுக்கல் சீனிவாசனுக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதையறிந்த ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணைய விதிகளின் படி இன்று வரை ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்பதால் என்னை கேட்காமல் எந்தவித வரவு செலவும் மேற்கொள்ள கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து கடிதம் எழுதி உள்ளது.
அதிமுக வங்கி கணக்குகளை முறையாக கையாள புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு மட்டுமே அதிகாரம் என இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் வங்கிகளுக்கு கடிதம் எழுதியதும், தேர்தல் ஆணைய விதிகளின் படி இன்று வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்பதால் என்னை கேட்காமல் எந்தவித வரவு செலவும் மேற்கொள்ள கூடாது மீறினால் நடவடிக்கை என ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.