இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அதிபர் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே, பங்களாதேஷ், நேபாள், மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தூதர்களை பணிநீக்கம் செய்துள்ளார் ஜெலன்ஸ்கி.
இவர்களுக்கான மாற்று பணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel