இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய நிலையில் அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.

அதிபர் மாளிகையைத் தொடர்ந்து பிரதமரின் அதிகாரபூர்வமான இல்லமான டெம்பிள் ட்ரீ முன்பாகவும் குவிந்துள்ள போராட்டக்காரர்கள் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன வீட்டில் ஜூம் வழியாக எம்.பி.க்களுடன் நடைபெற்ற அவசர கூட்டத்தில் பிரதமர் மற்றும் அதிபரை பதவி விலக சபாநாயகர் வலியுறுத்தவேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகும் பட்சத்தில் இலங்கை அரசியல் சாசன விதிகளின் படி சபாநாயகர் இடைக்கால அதிபராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டைநாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையையும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிகிறது.