டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  சோனியாகாந்தி, இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தல் பிரசாரத்தின்போது, மர்மநபர் அவரது  மார்பில் சுட்டார். இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்த அபேவை அவரது பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஷின்சோ அபேவின் மறைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  காங்கிரஸ் தலைவர் சோனியா விடுத்துள்ள செய்தியில், ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டது தனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்றும், இது ஜப்பானுக்கு நேர்ந்த மாபெரும் துரதிர்ஷ்டம் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  “பல ஆண்டுகளாக, திரு அபே இந்தியாவின் சிறந்த நண்பராகவும், நலம் விரும்பியாகவும் இருந்தார். அவர் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் நிறைய செய்தார். அவருடனான எனது சந்திப்பை நான் மிகவும் அன்பாகவும் தெளிவாகவும் நினைவுகூர்கிறேன். இது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.  உண்மையில், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கு அவரது மறைவு பேரிழப்பு என்றும்  கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]