திருவாரூர்; பள்ளி குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கும் வகையில், திருவாரூரில் அரசு உதவிப்பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியை,  மாணாக்கர்களுக்கு போட்டியை ஏற்படுத்தி, நன்றாக  வாய்ப்பாடு படித்து ஒப்பித்த மாணவிக்கு கிரிடம் சூட்டி, ஆசிரியையின் சேரில் அமரவைத்து பாராட்டினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாருரில் செயல்பட்டு வரும் மெய்ப்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியில், தலைமை ஆசிரியை, பள்ளி மாணவிகள், கணக்கில் நல்ல தேர்ச்சி பெறும் வகையில், வாய்ப்பாடு படிக்க அறிவுறுத்தினார். அப்போது, 20ம் வகுப்புவரை படித்து ஒப்பிக்கும் மாணவிகளுக்கு கிரிடம் சூட்டி, தனது இருக்கையில் அமரவைக்கப்படுவார்கள் என்று கூறி, அவர்களின் படிப்புத்திறனை ஊக்கப்படுத்தினார்.

அதன்படி,  அடுத்தநாள் வந்த மாணவிகள் ஆர்வத்துடன் வாய்ப்பாடு மனப்பாடம் செய்து வந்து ஒப்புவித்தனர். இதில், பிழையின்றி ஒப்புவித்த மாணவி சபிதாவை,  பள்ளியின் தலைமை ஆசிரியை கவுரவித்து, அந்த மாணவியின் தலையில் கிரிடம் சூட்டி, தனது இருக்கையில் அமர வைத்து கவுரவித்தார்.

இதுகுறித்து கூறிய  அந்த மாணவி,  தான் வருங்காலத்தில் கலெக்டர் ஆக விரும்புவதாக தெரிவித்தார்.