சண்டிகர்:
பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானுக்கு சண்டிகாரில் இன்று எளிய முறையில் திருமணம் நடக்கிறது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானுக்கும் குருக் ஷேத்ராவைச் சேர்ந்த குருப்ரீத் கவுர் என்ற 32 வயது டாக்டருக்கும் இன்று சண்டிகரில் திருமணம் நடக்க உள்ளது.
இந்த திருமணத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்ட ஆம் ஆத்மி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
பகவந்த்சிங் மான் ஏற்கனவே திருமணம் செய்து முதல் மனைவி மூலம் ஒரு மகன், மகள் உள்ளதாகவும், 6 வருடங்களுக்கு முன் விவகாரத்து பெற்று அவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel