டெல்லி: சில அரசியல் கட்சிகளின் கருத்துப் பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக டிவிட்டர் நிறுவனம் புகார் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான பதிவுகளை நீக்க மத்தியஅரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், சிலரின் டிவிட்டர் பதிவுகளை அகற்ற மத்தியஅரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.