சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒட்டுமொத்த முதலீட்டுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத் தானது. மொத்தம் 60 ஒப்பந்தங்கள் கையழுத்தாகின. இதன் மூலம் சுமார் 75ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் காரணமாக தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கிறது.
ரூ. 65,373 கோடிகள் மொத்த முதலீட்டில் 58,478 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் 53 ஒப்பந்தங்களும், ரூ. 59,871 கோடி மதிப்பல் வேலை வாய்ப்புகளுக்கான அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்ளும் என மொத்தம் ரூ.125 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கங்ள கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம், 74,898 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 21 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மொத்தம் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் தொடங்கி வைத்தார்.
அதையடுத்து, தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 ஆகியவற்றை வெளியிட்டார்.
இதுகுறித்து தமிகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் தலைமையில், தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு, இன்று சென்னையில் உள்ள தாஜ் கோரமாண்டல் ஓட்டலில் சிறப்புற நடைபெற்றது. இம்மாநாட்டின் வாயிலாக மொத்தம் 60 திட்டங்களின் மூலம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். இம்மாநாட்டில், கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றன:
நிதிநுட்பம் தொடர்பான நிகழ்வுகள்
டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் துவக்கம்: மாநிலத்தில் நிதித் தொழில் நுட்ப தத்தெடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ் (TNTecxperience) திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இத்திட்டம் மூலம் தனிநபர்கள் / புத்தொழில் நிறுவனங்கள் / குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதி நுட்பத்தினை தத்து எடுத்துக் கொள்வதை மேம்படுத்தும் வகையில், நிதி நுட்ப சேவைகளை இலவசமாகவோ அல்லது சில காலத்திற்கு குறைவான கட்டணத்திலோ பெறலாம்.
டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் இணையதளம் துவக்கம்: இந்தத் திட்டத்திற்கான இணையதளத்தையும் (<https://tntecxperience.com/>) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா – TN PitchFest – தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா (TN PtichFest), மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. வழிகாட்டி நிறுவனமும், StartupTN நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன. இந்த நிகழ்விற்கான விவரங்களை <https://tntecxperience.com/users/tnpitchfest> என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நிதிநுட்ப நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்த நிகழ்வில், 11 நிதி நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.
வ. எண் நிறுவனத்தின் பெயர் துறையின் பெயர்
1 VakilSearch (Uber9 Business Process Services Private Limited) சட்டவியல் நுட்பம்
2 PrimeInvestor Financial Research Pvt Ltd நிதி நுட்பம் – தனி நபர் நிதி ஆராய்ச்சி
3 Qapita FinTech India Private Limited நிதி நுட்பம் – பங்கு மேலாண்மை
4 Flexibees Business Services Private Limited பெண்களை பணியமர்த்துதல்
5 Simply Vyapar Apps Private Limited நிதி நுட்பம் – கணக்கியல் மென்பொருள் தீர்வுகள்
6 M2P Solutions Private Limited நிதி நுட்பம் – நிதிக் கட்டமைப்பு
7 Gupshup Technology India Private Limited தகவல் தொடர்பு தொழில் நுட்பம்
8 PayU நிதி நுட்பம் – கட்டணச் சேவைகள்
9 Infosys Limited தகவல் தொழில் நுட்பம் / ஏற்றப்பலகை (Springboard)
10 Mastercard உலகளாவிய கட்டணம் மேற்கொள்ளுதல் மற்றும் தொழில்நுட்பம்
11 PhonePe Private Limited நிதி நுட்பம் – கட்டணச் சேவைகள்
மேற்கொள்வதற்கான தீர்வு வழங்குநர்
நித நுட்ப நிறுவனங்களுக்கான ஊக்கத் தொகுப்புச் சலுகை: நிதிநுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்புச் சலுகை வழங்குவதற்கு நிதி நுட்ப ஆட்சி மன்றக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்புச் சலுகை அளிப்பதற்கான ஆணைகளை, மாண்புமிகு முதலமைச்சர் அந்நிறுவனங்களுக்கு அளித்தார்கள். விவரங்கள் பின்வருமாறு;
வ. எண் நிறுவனத்தின் பெயர் துறையின் பெயர்
1 PrimeInvestor Financial Research Pvt Ltd நிதி நுட்பம் – நிதி ஆராய்ச்சி தளம்
2 DigiMoney Finance Pvt Ltd நிதி நுட்பம் -மின்மய கடன் வழங்கும் தளம்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
மேலும் 65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
வ. எண் நிறுவனத்தின் பெயர் இடம் உற்பத்திப் பொருள்
1 Amplus (Petronas) தூத்துக்குடி பசுமை ஹைட்ரஜன்
2 Cubic PV தமிழ்நாடு மின்னணுப் பொருட்கள்
3 BAM Digital Realty சென்னை தகவல் தரவு மையம்
4 Sify சிறுசேரி, செங்கல்பட்டு தகவல் தரவு மையம்
5 MWIVEN ஓசூர், கிருஷ்ணகிரி விண்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரிபாகங்கள்
6 Lumina CloudInfra அம்பத்தூர் தகவல் தரவு மையம்
7 L&T கோயம்புத்தூர் தகவல் தொழில் நுட்பம்
8 Century Ply தூத்துக்குடி & திருவள்ளூர் மரச்சாமான்கள்
9 Equinix சிறுசேரி, செங்கல்பட்டு தகவல் தரவு மையம்
10 ENES Textile mills (Ramraj) கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஜவுளி மற்றும் ஆடைகள்
11 Rane Holdings Limited தமிழ்நாடு முழுவதும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள்
12 E-Man Automotive India Pvt Ltd தருமபுரி மின் வாகனங்கள்
13 WEG Industries (India) Pvt Ltd கிருஷ்ணகிரி காற்றாலைகளுக்கான மோட்டார்கள்
14 Rockwool Group — பொது உற்பத்தி
15 Mahindra & Mahindra Limited செங்கல்பட்டு, செய்யாறு மற்றும் கோயம்புத்தூர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய விரிவாக்கம் மற்றும் சோதனைச் சாலை விரிவாக்கம்
16 Voltas (TATA enterprise) மணல்லூர், கும்மிடிப்பூண்டி மின்னணுப் பொருட்கள்
17 Caterpillar India Pvt Ltd திருவள்ளூர் பொது உற்பத்தி
18 Sivaraj Spinning Mills Pvt Ltd திருப்பூர் ஜவுளி மற்றும் ஆடைகள்
19 Agger Technologies — மின்னணு உபகரணங்கள்
20 KM Knitwear திருப்பூர், திண்டுக்கல் ஜவுளி மற்றும் ஆடைகள்
21 Flex Foods கிருஷ்ணகிரி விவசாயப் பொருட்கள்
22 Ashirvad Pipes Private Limited திருவள்ளூர் பிவிசி பைப்புகள்
23 Bharat Fritz Werner Ltd ஓசூர், கிருஷ்ணகிரி மோட்டார் வாகன உதிரிபாகங்கள்
24 Maiva Pharma Pvt Ltd கிருஷ்ணகிரி மருத்துவப் பொருட்கள்
25 KRG textile Mills Pvt Ltd திருப்பூர் நூற்பாலை
26 Gokaldas Group ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி ஆடைகள்
27 Cellestial E-Trac Pvt Ltd சென்னை மின்சார டிராக்டர்கள்
28 Acat Flying Academy Pvt Ltd சிவகங்கை விமான பயிற்சி
29 Bharat Alt Fuel ஒரகடம் மின்சார இரு சக்கர வாகனங்கள்
30 Syrma SGS சென்னை, விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி மோட்டார் வாகன உதிரி பாகங்கள்
31 JS Auto Cast Foundry India Pvt Ltd (Bharat Forge Group) கோயம்புத்தூர் வார்ப்புகள்
32 CIE Hosur Ltd (Phase-3) ஓசூர், கிருஷ்ணகிரி மோட்டார் வாகன உதிரி பாகங்கள்
33 Muralya Diary மண்ணப்பாறை, திருச்சி பால் பதனிடும் ஆலை
34 Hablis Health Care செங்கல்பட்டு பல்சிறப்பு மருத்துவமனைகள்
35 Reep Industries மறைமலைநகர், செங்கல்பட்டு மின்சார பேருந்து உற்பத்தி
36 Tropical Agro திருவள்ளூர் உரம்
37 3i Medical Technologies Pvt Ltd சென்னை மருத்துவப் பொருட்கள்
38 Aventose Energy கிருஷ்ணகிரி மின் இரு சக்கர வாகனங்கள்
39 Scott Bader திருவண்ணாமலை இரசாயனங்கள்
40 GX India Private Limited சென்னை புத்தாக்கம் மற்றும் மேம்பாடு மையம்
41 Digiryte Private Limited சென்னை தகவல் தொழில் நுட்பம்
42 Saveetha Group (NMV University) திருவள்ளூர் மற்றும் விருதுநகர் பல்சிறப்பு மருத்துவமனை
43 JC Indian Airline Academy சிவகங்கை விமான பயிற்சி
44 Sethiya Exports Pvt Ltd நாமக்கல் மற்றும் கரூர் நூற்பாலை
45 KPR Sugar apparels Limited திருப்பூர் ஜவுளி / ஆடைகள்
46 Galva Decoparts திருவண்ணாமலை மோட்டார் வாகன உதிரிபாகங்கள்
47 JOST குன்றத்தூர், காஞ்சிபுரம் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள்
48 Linea Fashions (India) Pvt Ltd செங்கல்பட்டு ஆடைகள்
49 TaskUS India Private Limited சென்னை தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்
50 Elgi Sauer கோயம்புத்தூர் கப்பலுக்கான பம்புகள்
51 WickedRide Adventure (Bounce) — மின் வாகன உபகரணங்கள்
52 Entuple E Mobility ஓசூர், கிருஷ்ணகிரி மின் வாகன உபகரணங்கள்
53 Garuda Aerospace — டிரோன்கள்
சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (7)
மேலும் 59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. விவரங்கள் பின்வருமாறு
வ. எண் நிறுவனத்தின் பெயர் இடம் உற்பத்திப் பொருள்
1 ACME Green Hydrogen and Chemicals Pvt Ltd தூத்துக்குடி பசுமை அமோனியா
2 Tata Power சிப்காட் கங்கைகொண்டான், திருநெல்வேலி மின்னணுவியல்
3 Lucas TVS திருவள்ளுர் லித்தியம் அயன் செல்கள்
4 MPlastics Toys and Engineering Pvt Ltd ஓசூர், கிருஷ்ணகிரி விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி
5 VVDN பொள்ளாச்சி, கோயம்புத்தூர் தகவல் தொழில் நுட்பம்
6 Aravind Ceramics தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் பொது உற்பத்தி
7 IAMPL ஓசூர், கிருஷ்ணகிரி விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்
ஆக மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.
அடிக்கல் நாட்டுதல் இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
வ. எண் நிறுவனத்தின் பெயர் இடம் உற்பத்திப் பொருள்
1 JSW Renew Energy சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி காற்றாலை எரிசக்தி
2 Sify Technologies சிறுசேரி, செங்கல்பட்டு தகவல் தரவு மையம்
3 L&T Data Centre காஞ்சிபுரம் தகவல் தரவு மையம்
4 L&T கோயம்புத்தூர் தகவல் தொழில் நுட்பம்
5 CtrlS அம்பத்தூர், சென்னை தகவல் தரவு மையம்
6 Equinix செங்கல்பட்டு தகவல் தரவு மையம்
7 Jay Jay Mills (India) Pvt Ltd ஈரோடு ஜவுளி மற்றும் ஆடைகள்
8 Rajratan Global Wire Ltd காஞ்சிபுரம் டயர்களுக்கான உபகரணங்கள்
9 Arthanari Loom Centre (Textiles) Pvt Ltd சேலம் / கரூர் நூற்பாலை
10 Ansell Sterile Solutions – Ph 2 ஈரோடு கையுறை
11 WEG Industries (India) Pvt Ltd ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் காற்றாலைகளுக்கான மோட்டார்
12 Mylan Laboratories Limited கிருஷ்ணகிரி மருந்துப் பொருட்கள்
13 KKP Group of Companies கடலூர், புதுக்கோட்டை நூற்பாலை
14 Schaeffler India Ltd. கிருஷ்ணகிரி மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்
15 SRF Ltd சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை தொழில் நுட்ப ஆடைகள்
16 Avigna Industrial Park காஞ்சிபுரம் தொழிற்பூங்கா
17 Makino India Pvt Ltd கோயம்புத்தூர் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்
18 Kartya Textiles விருதுநகர் நூற்பாலை
19 Gokaldas Group ஈரோடு ஜவுளி மற்றும் ஆடைகள்
20 Galva Decoparts திருவண்ணாமலை மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்
21 Levim Lifetech Pvt Ltd செங்கல்பட்டு மருந்துப் பொருட்கள்
திட்டங்களைத் துவக்கி வைத்தல்
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மொத்தம் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் துவக்கி வைத்தார்கள்.
வ. எண் நிறுவனத்தின் பெயர் இடம் உற்பத்திப் பொருள்
1 Avigna Industrial Park கிருஷ்ணகிரி தொழிற்பூங்கா
2 CIE Hosur Ltd ஓசூர் மோட்டார் வாகன உதிரி பாகங்கள்
3 Gainup Industries (Phase I of IV) திண்டுக்கல் ஜவுளி
4 Steel Shoppe இருங்காட்டுக்கோட்டை எஃகுப் பொருட்கள் (மோட்டார் வாகனம்)
5 Rathinam Tech Zone Phase 2 கோயம்புத்தூர் தகவல் தொழில் நுட்பப் பூங்கா
6 Ansell Sterile Solutions Ph-1 ஈரோடு பேக்கேஜிங்
7 Cubic Modular System India Pvt Ltd காஞ்சிபுரம் மின் இணைப்புக்கள் உற்பத்தி
8 Mitsuya Farms Private Limited கிருஷ்ணகிரி உணவுப் பொருட்கள்
9 Subros phase-1 ஒரகடம் மோட்டார் வாகன உதிரி பாகங்கள்
10 BSA Corporation Ltd காஞ்சிபுரம் மோட்டார் வாகனங்களுக்கான Wiring
11 Gokaldas Exports Ph-1 கிருஷ்ணகிரி ஜவுளி
12 Tech Mahindra கோயம்புத்தூர் தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்
இந்த திட்டங்கள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 23 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022 வெளியீடு
2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022 ஐ வெளியிட்டார்கள்.
தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 வெளியீடு
2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 ஐ வெளியிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் ததங்கம் தென்னரசு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு & வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச்செயல் அலுவலர் பூஜா குல்கர்னி இ.ஆ.ப., டாடா பவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர், ப்ரவீர் சின்ஹா, ஆக்மே குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மனோஜ்குமார் உபாத்யாய், கூபிக் பிவி நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர், பீட்டர் வான் மீர்லோ, அயல் நாட்டுத் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் / கூட்டமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்ட நிறுவனங்கள்: