டெல்லி: அரசியல் ஆதாயங்களுக்காக தேச விரோத செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பின்வாங்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளர்.

உச்சநீதிமன்றத்தில் இன்று நூபுர் சர்மா விவகாரம் எதிரொலித்தது. நூபுர் சர்மாவை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், இதுபோன்ற டிபேட்களை நடத்திய டைம்ஸ்நவ் தொலைக்காட்சி ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களையும் கடுமையாக சாடியது.

உச்சநீதி மன்றத்தின் இன்றைய விசாரணை, மற்றும் நீதிபதிகளின் கருத்து மற்றும் உத்தரவு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நூபுர்சர்மா வழக்கு மற்றும் உச்சநீதிமன்றத்தின் விசாரணை குறித்து அகில இந்திய கங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டு உள்ளர்.

அதில், தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக தேச விரோத சக்திகளை துருவப்படுத்துவதற்கு எதிரான தனது போராட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி (INCindia) ஒருபோதும் நிறுத்தாது என தெரிவித்துள்ளார்.