புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ்2 வகுப்பு தேர்வில் 96.13 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில், 89.06% அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் 94.87% தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.15% முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்வு எழுதியவர்களில்  7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்  புதுச்சேரியில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை   முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தேர்ச்சி விழுக்காடு 96.13 சதவீதம். கடந்த முறையை விட இது 4.81 சதவீதம் கூடுதலாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் 14 ஆயிரத்து 423 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றவர்,  இரண்டு அரசு பள்ளிகள் உள்பட 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டை விட அரசு பள்ளிகள் 10 விழுக்காடு கூடுதல் தேர்ச்சியை பெற்றுள்ளன என்றார்.

தொடர்ந்து பேசியவர், கல்வி கட்டணங்கள் குறித்து அரசு விரைவில் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறியவர்,  பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளும் உயர்கல்வி படிக்கும் அளவிற்கு அரசு கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கி கொடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி என்றார்.