சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தேர்வு முடிவை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தேர்வு முடிவில், 89.06% அரசு பள்ளிகள் முழுமை யாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 27ம் தேதி நடைபெறும்.வரும் 24ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 93.76% ஆக உயர்ந்துள்ளது.

 தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இந்த மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.  2வது இடத்தை விருதுநகர் (97.27%) மாவட்டம் பிடித்துள்ளது. 3வது இடம்  ராமநாதபுரம் (97.02%) உள்ளது. 86.69% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 89.06% அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் 94.87% தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.15% முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்வெழுதிய 3,095 மாற்றுத் திறனாளிகளின் 2,824 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 74 சிறை கைதிகள் தேர்வெழுதிய நிலையில் 71 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 634 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடத்தில் 1500 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

உயிரியல் பாடத்தில் 1541 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 1858 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தாவரவியல் பாடத்தில் 47 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

விலங்கியல் பாடத்தில் 22 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணினி அறிவியல் பாடத்தில் 3827பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வணிகவியல் பாடத்தில் 4634 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணக்கு பதிவியல்  பாடத்தில் 4540 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பொருளியல் பாடத்தில் 1146 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணிகப் பயன்பாடு பாடத்தில் 2818பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 1151 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள்.