கொரோனா காலகட்டத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. சிறப்பாக செயலாற்றியதற்கு பரிசாக 2023-27 ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமை ரூ. 48,390 கோடிக்கு ஏலம் போனதாக பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் வென்றிருப்பதாக கூறியுள்ளார்.

23,575 கோடி ரூபாய்க்கு தொலைக்காட்சி உரிமை ஏலம் போனதாக தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் 23,758 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், நமது மிகப்பெரிய பங்குதாரர்களான கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகத்தர வசதிகளுடன் உயர்தர கிரிக்கெட்டை ரசிக்கும் அனுபவத்தை வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள், ஐ.பி.எல். உரிமையாளர்கள் ஆகியோருக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.