சென்னை: ரூ.290 கோடியில் கோவையில் கட்டப்பட்டுள்ள இரண்டு மேம்பாலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
கோவையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 2பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள சுங்கம்- ராமநாதபுரம் மேம்பாலம் மற்றும், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கவுண்டம் பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், முதல்வர் இன்று காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துறை அமைச்சரான பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.