டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசு தலைவராக யாரை நியமிப்பது என ஆளும் பாஜக அரசும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், நாடாளுமன்றத்தில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், பாஜக அறிவிக்கும் வேட்பாளரே தேர்வு பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், பாஜக சார்பில் குடியரசு தலைவர் பதவிக்கு யார் நிறுத்தப்பட உள்ளார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் குறித்து அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்து உள்ளது.