பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற விவசாய சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகத்தில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் விவசாயகிள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, அங்கு வந்த சிலர், திகாயத்மீது, கருப்பு மை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களும் திரும்ப பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ராகேஷ் திகாயத். இவர் பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவராக இருக்கிறார்.  மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு  எதிராக ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தினார். டெல்லி எல்லை மற்றும் டெல்லியில் நடைபெற்ற  விவசாய போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்.

இன்று பெங்களூருவில் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மேடை அருகே வந்த ஒருவர் ராகேஷ் திகைத்தை அங்கிருந்த மைக்கை எடுத்து தாக்கினார். தொடர்ந்து வந்த மற்றொருவர் கருப்பு மை வீசினார். இதையடுத்து, அங்கிருந்த ராகேஷ் திகைத் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதால் அசாதாரண சூழல் நிலவியது. இந்த சம்பவத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய ராகேஷ் திகாயத், “இந்த நிகழ்விற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அரசுடன் கூட்டு சேர்ந்துதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.