கொல்கத்தா: தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் முதல்வரே துணைவேந்தராக இருக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்ட உள்ளதாக அமைச்சர் பிரத்யா பாசு தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில், மாநில பல்கலைக்கழகங்களின் தலைவராக (துணைவேந்தராக), தமிழக முதல்வர் இருக்கும் வகையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டைப்போல, மேற்கு வங்கத்தில் மாநில பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு பதில் முதல்வரே துணைவேந்தராக இருக்கும் சட்ட திருத்தம் கொண்டு வர இருப்பதாக அம்மாநில அமைச்சர் பிரத்யா பாசு கூறி உள்ளார். மேற்கு வங்க மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு பதில் முதல்வரே துணைவேந்தராக இருப்பார் என்றும், அதற்கான சட்டத்திரும் பேரவையில் விரைவில் கொண்டுவரப்படும் எனவும் கூறியுள்ளார்.